உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - மேத்யூ ஹைடன்
உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி இன்று அபாரமாக விளையாடியது. இதன்மூலம் டி 20 உலகக் கோப்பையின் இறுதிபோட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியில் வெல்லும் அணி, பாகிஸ்தானை இறுதிபோட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "இந்த நாள் மிகவும் சிறப்பானது. சில விஷயங்கள் அற்புதமாக அமைந்தன. எல்லோரும் பாபர் - ரிஸ்வான் பற்றி பேசுவார்கள். எங்களுடைய பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீச முடிந்ததால் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்வது கடினமாகி விட்டது. இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம். ஏனெனில் அப்போது அது அமர்க்களமான ஆட்டமாக அமையும். இது நினைத்துப் பார்க்க முடியாதது" என்று மேத்யூ ஹைடன் கூறினார்.
.