டி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி

சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கோலி 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

Update: 2024-03-22 15:34 GMT

Image Courtesy; @RCBTweets

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்சிஸ் மற்றும் கோலி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பிளெஸ்சிஸ் 35 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய படிதார், மேஸ்வெல் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து க்ரீன் கோலியுடன் இணைந்தார். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன் எடுத்த போது டி20 கிரிக்கெடில் 12,000 ரன்களை கடந்துள்ளார். 

இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிறிஸ் கெயில் ( 14,562 ரன்), 2வது இடத்தில் சோயப் மாலிக் (13,360 ரன்), 3வது இடத்தில் கீரன் பொல்லார்ட் (12,900 ரன்,) 4வது இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் (12,319 ரன்), 5வது இடத்தில் டேவிட் வார்னர் (12,065) ஆகியோர் உள்ளனர்.

6வது இடத்தில் விராட் கோலி உள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த படியாக இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 11,156 ரன்களுடன் 8வது இடத்தில் உள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்