சூப்பர் 12 சுற்று: ஜிம்பாப்வேக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2022-10-30 04:45 GMT

பிரிஸ்பேன்,

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹொசேன் சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.

கேப்டன் ஷகிப் அல் ஹசன் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாட உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்