சூப்பர் 12 சுற்று: ஆப்கானிஸ்தானுக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2022-11-04 09:53 GMT

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும்.

இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்பதால், தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியில் இறங்கினர்.

ஆனால் அவர்கள் நினைத்தபடி அது கைகூடவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மித 4 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்சேல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார். கடைசியில் மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்