ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்தவர் தேர்வு

மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்து இருந்தது.

Update: 2024-04-08 08:58 GMT

image courtesy: AFP

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்து இருந்தது.

அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளரான மார்க் ஆடிர், இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான ஆஷ் கார்ட்னர், இங்கிலாந்து பேட்ஸ்மேனான மாயா பவுஷிர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக மாயா பவுஷிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்