அவர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் - வருண் சக்ரவர்த்தி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.;

Image Courtesy: @KKRiders
மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா முன்னணி வீரரான வருண் சக்ரவர்த்தி ஜியோஹாட்ஸ்டாரின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்த (அவுட்) விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வருண் சக்ரவர்த்தி கூறியதாவது,
நிச்சயமாக சிறந்த பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் தான். குறிப்பாக, ஹென்ரிச் க்ளாசென், நிக்கோலஸ் பூரன், விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள். இவர்கள் அனைவரும் நட்சத்திர வீரர்கள். நான் அவர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.