இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாபிரிக்க வீரர் லுங்கி இங்கிடி விலகல்...!
முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
டர்பன்,
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. தற்போது, இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாபிரிக்க வீரர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார். அவரது இடது கணுக் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.