தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்: டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்..!

டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-11-29 07:05 GMT

Image Courtesy: Durban's Super Giants

கேப்டவுன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி.டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்