ஷகிப் அல் ஹசன் மீது கொலை குற்றம்... என்ன நடந்தது..?

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

Update: 2024-08-23 11:57 GMT

image courtesy: AFP

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், அந்நாட்டின் எம்.பி.ஆகவும் இருப்பவர் ஷகிப் அல் ஹசன். இவர் தற்போது ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடி வருகிறார்.

இதனிடையே அவர் மீது வங்காளதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அவர் எப்போது வங்கதேசதிற்கு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டத்தின்போது முகமது ரூபெல் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷகிப் அல் ஹசன் உட்பட 156 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் உள்ள அடபோர் காவல் நிலையத்தில் ரூபெலின் தந்தை ரபிகுல் இஸ்லாம் தாக்கல் செய்த வழக்கில், ஷகிப் மற்றும் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 156 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்