டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷகிப் 1 விக்கெட் வீழ்த்தினார்.

Update: 2024-06-23 04:48 GMT

image courtesy: AFP

ஆன்டிகுவா,

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆன்டிகுவாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்'டாஸ்' வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 196 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் கைப்பற்றிய விக்கெட் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அவர் வீழ்த்திய 50-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை ஷகிப் அல்-ஹசன் படைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்