நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு..! ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து பிரேஸ்வெல் விலகல்

ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்

Update: 2023-06-14 10:03 GMT

Image Courtesy : ICC Twitter 

இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார். ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார். ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்