16 வருடங்கள் கழித்தும் ரோகித் சர்மா அப்படியே இருக்கிறார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்

டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியபோது ரோகித் சர்மாவை முதல் முறையாக பார்த்ததாக ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-08 09:28 GMT

வெலிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் தோனிக்கு பின் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது ரோகித் சர்மா முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடினார். 2012 வரை அந்த அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 2009 சீசனில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

இந்நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆரம்ப காலங்களில் ஒன்றாக விளையாடிய போது 19-20 வயதில் ரோகித் சர்மாவை முதல் முறையாக பார்த்ததாக நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அப்போதே ரோகித் வருங்காலத்தில் ஸ்பெஷல் வீரராக வருவார் என்று உணர்ந்ததாகவும் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

மேலும் இத்தனை வருடங்களாகியும் ரோகித் சர்மா குணத்தில் மாறாமல் அப்படியே இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"2008 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் விளையாடி அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் எங்களுடன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். அப்போது அவருக்கு 19 - 20 வயதுதான் இருக்கும். அப்போதே அந்த குழந்தையிடம் ஏதோ ஸ்பெஷல் இருப்பதை நான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே இந்தியா - இலங்கைத் தொடரில் அவர் விளையாடியபோது நான் வர்ணனை செய்தேன்.

16 வருடங்கள் கழித்தும் அவர் இப்போதும் அதே பையனாக இருக்கிறார். ஐபிஎல் தொடரின் முதல் வருடத்தில் நாங்கள் கோப்பையை வெல்லும் அணியாக வந்தோம். ஆனால் கடைசியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தோம். அந்த வருடம் எங்களுடைய அணியில் பெரிய பெயர்கள் இருந்தன. இருப்பினும் அணியில் சமநிலை இல்லை. அதனால் கடைசி இடத்தை பிடித்தோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்