மழையால் தடைப்பட்ட 2-வது டி-20; இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்கள் சேர்ப்பு

இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

Update: 2023-12-12 17:19 GMT

Image Courtesy : @BCCI

கெபேஹா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த திலக் வர்மா 29 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ், 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

ரிங்கு சிங் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்