ஐபிஎல் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ? - வெளியான தகவல்..!!

ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி, பாலிவுட் நட்சத்திரங்களின் வருகை என ஐபிஎல் நிறைவு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

Update: 2022-05-29 10:54 GMT

Image Courtesy : AFP / Twitter @IPL 

அகமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் பலர் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமின்றி இந்த போட்டியில் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த போட்டியை காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடியின் வருகை காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மோடியின் வருகை குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்