பும்ரா இல்லை.... இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்..? ஷமி வித்தியாசமான பதில்

இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று சமீபத்திய பேட்டியில் முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

Update: 2024-07-21 11:01 GMT

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து  வீச்சாளர் முகமது ஷமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த 8 மாதங்களாக எந்த போட்டியிலும் ஆடவில்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்சமயத்தில் இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த வித்தியாசமான பதில் பின்வருமாறு:-

"தற்சமயத்தில் நான்தான் இந்தியாவின் சிறந்த பவுலர் என்று நினைக்கிறேன். நான், பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் கூட்டணியாக இந்திய அணிக்கு விளையாடினோம். 5 - 6 பேரைக் கொண்ட எங்கள் கூட்டணியை விட உலகில் வேறு எந்த பவுலர்களும் மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்க மாட்டார்கள். பொதுவாக நான் நம்பர் 1 அல்லது நம்பர் 2 போன்றவற்றை நம்ப மாட்டேன். நாங்கள் 5 - 6 பேருமே சிறந்த பவுலர்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்