காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து காலின் டி கிராண்ட்ஹோம் விலகல்
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து காலின் டி கிராண்ட்ஹோம் விலகியுள்ளார்.
நாட்டிங்கம்,
நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோம் குதிகால் காயத்தால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரது காலை ஸ்கேன் செய்தபோது காயம் பெரிய அளவில் இருப்பது தெரியவந்தது. காயத்தில் இருந்து குணமடைய குணமடைய 10 முதல் 12 வாரங்கள் தேவைப்படும் என்பதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.
டி கிராண்ட்ஹோம்க்கு பதிலாக 31 வயதான மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் இடம் பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார். இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.