தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்!

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹில்டன் மோரேங் தொடருகிறார்.

Update: 2023-11-24 10:00 GMT

image courtesy; ICC

கேப்டவுண்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் லாரா வால்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கு தற்காலிக கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடி தந்தார். தற்போது 3 வடிவிலான போட்டிகளுக்கும் முழுநேர கேப்டனாக லாரா வால்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது கேப்டன் பதவி அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடைபெற உள்ள வங்காளதேச அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹில்டன் மோரேங் தொடருகிறார்.

டி 20 அணி; லாரா வால்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ்,டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேரி டெர்க்சென், மைக் டி ரிடர், லாரா குடால், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜப்டா, மசபடா கிளாஸ், சுனே லூயிஸ், எலிஸ்-மேரி மார்க்ஸ், நோன்குலுலெகோ மலாபா, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கேஸ், டெல்மி டக்கர்.

வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா தொடருக்கான போட்டி அட்டவணை:

டி20 தொடர்:

1வது டி20 - டிசம்பர் 3

2வது டி20 - டிசம்பர் 6

3வது டி20 - டிசம்பர் 8

ஒரு நாள் தொடர்

முதலாவது ஆட்டம் - 16 டிசம்பர்

2-வது ஆட்டம் - 20 டிசம்பர்

3-வது ஆட்டம் - 23 டிசம்பர்

Tags:    

மேலும் செய்திகள்