மயங்க் யாதவ் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 48வது லீக் ஆட்டத்தில் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத உள்ளன.
எனவே இந்த ஆட்டத்தை முன்னிட்டு லக்னோ பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மயங்க் யாதவ் காயம் குறித்தும், அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மோர்கல் கூறியதாவது, மயங்க் யாதவ் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார். அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை மீண்டும் அணியில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாளை (இன்று) நடைபெறும் ஆட்டத்தில் முதல் 12 வீரர்களில் மயங்க் யாதவும் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.