நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்...பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 10% அபராதம் - காரணம் என்ன..?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
பெங்களூரு,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை டிஎல்எஸ் முறையில் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. பாகிஸ்தான் அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்துவீசியது தெரிய வந்தது.
இந்நிலையில் மெதுவாக பந்துவீசிய காரணத்துக்காக பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.
ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பாக, ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.