கேஎல் ராகுல் தான் லக்னோ அணியின் மிகப்பெரிய பலம் - ஆஸி. முன்னாள் வீரர் புகழாரம்

கேஎல் ராகுலும், குவிண்டன் டி காகும் தான் லக்னோ அணியின் மிகப்பெரிய பலம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

Update: 2023-03-27 16:08 GMT

கொல்கத்தா,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

வரும் 31ம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், டோனி தலமையிலான சென்னை அணியும் மோத உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஆரோன் பிஞ்ச் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குறித்து கூறுகையில், ஆடுகளத்தை சில நேரங்களில் கணிக்க முடியாததாக இருக்கும்போதும் உள்ளூர் மைதானம் லக்னோ அணிக்கு சாதமகாக அமையும். கேஎல் ராகுல், குவிண்டன் டி காக் ஆகிய 2 வீரர்களும் லக்னோ அணியின் மிகப்பெரிய பலம்.

லக்னோ அணி கேஎல் ராகுல், குவிண்டன் டி காக் ஆகிய 2 சிறந்த தொடக்க வீரர்களுடன் களமிறங்குகிறது. ஸ்டாய்னஸ், நிகோலஸ் பூரன் போன்ற வலிமையான வீரர்களை மத்திய வரிசையில் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. லக்னோ அணியின் திருப்புமுனை வீரராக தீபக் ஹூடா இருப்பார் என்று நான் நினைக்கிறேன். எனது கணிப்பு படி நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 5வது இடத்தை பிடிக்கலாம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்