சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண்- வரலாற்று சாதனை படைத்த கிம் காட்டன்
அவர் வெய்ன் நைட்ஸுடன் கள நடுவராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டுனிடின்,
சர்வதேச ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளும் டி20 போட்டியில் மோதி வருகின்றனர். முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெண் நடுவராக கிம் காட்டன் செயல்பட்டார். இரு ஆடவர் அணிகளுக்கு இடையேயான சர்வதேச போட்டியில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார். அவர் வெய்ன் நைட்ஸுடன் கள நடுவராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.