20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.

Update: 2022-09-26 19:15 GMT

துபாய்,

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.

அத்துடன் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை (261 புள்ளி) விட 7 புள்ளிகள் முன்னிலை கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா (250 புள்ளி) ஒரு புள்ளி குறைந்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கை (237 புள்ளி) 8-வது இடத்திலும், வங்காளதேசம் (224 புள்ளி) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) 10-வது இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்