மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு..!

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2023-04-18 13:33 GMT

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதிக்கட்டம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்துவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை மற்றும் ஐதராபாத அணிகள் தலா 4 ஆட்டங்களில் ஆடி அதில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் யார் தங்களது 3வது வெற்றியை பதிவு செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்