'என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்' - முன்னாள் வீரர் குறித்து ஹார்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Update: 2023-01-08 15:38 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு 2-1 என அந்த தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இது குறித்து பேசியுள்ள ஹார்திக் பாண்டியா கூறியதாவது ,

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதில் முக்கியமான விஷயம் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் பணியாற்றியதுதான். ஆஷிஷ் நெஹ்ரா தான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.ஏனெனில் எங்கள் . நாங்கள் இரண்டு வெவ்வேறு கேரக்டர்கள் ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை இருவரது நோக்கமும் சிந்தனையும் ஒன்றுதான். அது எனது கேப்டன்ஷிக்கு கூடுதல் மதிப்பை சேர்த்தது.

எந்த ஒரு ஜூனியர் கிரிக்கெட் அணியையும் நான் வழி நடத்தியது கிடையாது. 16 வயதுக்கு உட்பட்ட பரோடா அணிக்கு முன்பு ஒருமுறை கேப்டனாக செயல்பட்டேன்.   பின்னர் என்னுடைய ஆட்டத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்