தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படாத ராகுல் திரிபாதி - முன்னாள் வீரர்கள் அதிருப்தி..!!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் திரிபாதி இதுவரை இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை.;

Update:2022-05-22 22:05 IST

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனின் கடைசி லீக் போட்டியில் ஐதராபாத் அணி பஞ்சாப் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. நடப்பு சீசனில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த ஐதராபாத் அணி அதன் பிறகு மார்க்ரம், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் போன்ற வீரர்களின் அதிரடியால் அடுத்த 5 போட்டிகளில் வெற்றியை பெற்றது.

அதன் பிறகு மீண்டும் தொடர் தோல்வியை சந்தித்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் முக்கிய வெற்றிகளின் அங்கமாக இருந்தவர் ராகுல் திரிபாதி.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் திரிபாதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் இந்திய அணிக்காக இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த சீசனில் அவர் இதுவரை 14 போட்டிகளில் 413 ரன்கள் அடித்துள்ளார்,

இவரை உலகக்கோப்பை 20 ஓவர் போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் ராகுல் திரிபாதி இடம்பெறவில்லை.

இதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக் மற்றும் ஹர்பஜன் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து ஹர்பஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், " இந்திய அணியில் ராகுல் திரிபாதியின் பெயரை காணாதது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர். " என பதிவிட்டுள்ளார்.

திரிபாதி தேர்வாகாதது குறித்து சேவாக் பேசுகையில், "சென்ற வருடம் சூர்யகுமார் யாதவ் பற்றி இது தான் இதை தான் பேசினோம் " என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்