நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

Update: 2022-12-26 04:42 GMT

Image Courtesy: ICC Twitter 

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது.

கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார். தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற பாகிஸ்தான் அணிக்கு இன்னும் சிறிதளவு வாய்ப்பு உள்ளதால் அந்த அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்