இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தோனியின் அந்த சிக்சர்...! வான்கடே மைதானத்தில் நினைவிடமாக மாற்றம்

அந்த சிக்சர் பந்து விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது ,

Update: 2023-04-07 13:30 GMT

மும்பை,

கடந்த 2011-ல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா. இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியின் முக்கிய தருணமாக இலங்கை வீரர் குலசேகரா வீசிய 48 வது ஓவரின் 2வது பந்தை பந்தை தோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கவுரவித்துள்ளது . அதன்படி.இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் 'வின்னிங் ஷாட்' சிக்சரை கவுரவிக்கும் விதத்தில், அந்த சிக்சர் பந்து விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது ,

வான்கடே மைதானத்தில் இருக்கை எண் ஜே 282 - ஜே 286 ஆகியவற்றை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது,

கிரிக்கெட் வரலாற்றில், ஒருவரின் சிக்சரை நினைவுகோரும் விதத்தில் நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறையாகும்

Tags:    

மேலும் செய்திகள்