தன் சட்டையில் தோனியின் ஆட்டோகிராப் வாங்கிய சுனில் கவாஸ்கர்...!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - கொல்கத்தா போட்டி நடைபெற்றது.

Update: 2023-05-15 04:48 GMT

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 1477 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

இதையடுத்து, போட்டி முடிந்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கேப்டன் டோனி உள்பட சென்னை வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டோனி நோக்கி ஓடி வந்த தனது சட்டையில் 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்டார். இதையடுத்து, டோனி சுனில் கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்