தோல்வி எதிரொலி.. இரண்டே நாளில்'நம்பர் ஒன்' இடத்தை இழந்த பாகிஸ்தான்

நியூசிலாந்து கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

Update: 2023-05-08 22:15 GMT

கராச்சி,

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் 4-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றதும் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய பாகிஸ்தான், தற்போதைய தோல்வியால் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

48 மணி நேரத்திற்குள் 'நம்பர் ஒன்' அந்தஸ்தை இழந்துள்ளது. தரவரிசையில் டாப்-2 இடங்களை ஆஸ்திரேலியாவும் (113 புள்ளி), இந்தியாவும் (113 புள்ளி) வகிக்கின்றன. பாகிஸ்தான் 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து (111 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (108 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்