ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

Update: 2024-03-11 04:41 GMT

Image Courtesy: AFP

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 2வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி (62.5 சதவீதம்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து (50 சதவீதம்) 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (68.51 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 4வது இடத்தில் (50 சதவீதம்) வங்காளதேசமும், 5வது இடத்தில் (36.66 சதவீதம்) பாகிஸ்தானும் உள்ளன.

6 முதல் 9 இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸ் (33.33 சதவீதம்), தென் ஆப்பிரிக்கா (25 சதவீதம்), இங்கிலாந்து (17.5 சதவீதம்), இலங்கை (0.0 சதவீதம்) ஆகிய அணிகள் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்