நான் எதிர்கொண்ட பவுலர்களில் மிகவும் கடினமானவர் அவர்தான் - ரோகித் பாராட்டு

டேல் ஸ்டெயின் தாம் எதிர்கொண்ட பவுலர்களில் மிகவும் கடினமானவர் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-16 10:59 GMT

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் தாம் எதிர்கொண்ட பவுலர்களில் மிகவும் கடினமானவர் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அதனால் போட்டிக்கு முன்பாக 100 முறை அவருடைய பவுலிங் வீடியோக்களை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய செல்வேன் என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"நான் எதிர்கொண்ட பவுலர்களில் மிகவும் கடினமான பவுலர் என்றால் அது டேல் ஸ்டெயின்தான். அதனால் பேட்டிங் செய்ய செல்வதற்கு முன்பாக அவருடைய வீடியோக்களை 100 முறை பார்ப்பேன். அவர் இந்த விளையாட்டின் லெஜெண்ட். தம்முடைய கெரியரில் அவர் சாதித்துள்ளதை பார்ப்பது சூப்பராக இருக்கும். அவரை நான் பலமுறை எதிர்கொண்டுள்ளேன். அவர் மிகவும் வேகமானவர்.

பந்தை அதிக வேகத்தில் ஸ்விங் செய்வார். அது மிகவும் கடினமாகும். அவர் கடினமான போட்டியை கொடுக்கக்கூடிய ஒரு போட்டியாளர். களத்தில் தாம் விரும்பும் விஷயங்களை செய்யக்கூடிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கக் கூடியவர். எனவே அவருக்கு எதிராக விளையாடியது நன்றாக இருந்தது. அவருக்கு எதிராக நான் பெரிய அளவில் வெற்றிகரமாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவருக்கு எதிரான போட்டியை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்