உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியை பெறப்போவது யார்..? - இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்...!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Update: 2023-10-15 09:15 GMT

Image Courtesy: @OfficialSLC / @CricketAus

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் 5 முறை உலகசாம்பியனான ஆஸ்திரேலிய அணி இலங்கையை லக்னோவில் எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 2 லீக் ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டுள்ளன.

எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை எட்ட வாய்ப்பு உள்ளது என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்