கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
தமிழக அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.;
சென்னை,
கூச் பெஹர் கோப்பைக்கான ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 4 நாள் கிரிக்கெட் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டம் நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்தது. இதில் 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-திரிபுரா அணிகள் மோதின.
இதில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 467 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய திரிபுரா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய திரிபுரா அணி 3-வது நாள் முடிவில் 27 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 70.3 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.