விராட் கோலிக்கு 'தங்க பேட்' : பிறந்த நாள் பரிசு வழங்கிய மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம்

இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

Update: 2023-11-05 18:02 GMT

Image Courtacy: CAB Media

கொல்கத்தா,

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, தனது 35வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் பரிசளித்து உள்ளது. இதன்படி மேற்கு வங்காளம் CAB (கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பெங்கால்) தலைவர் சினேகாசிஷ் கங்குலி, விராட் கோலிக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதனிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்