டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட வங்காளதேசம்

டி 20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வங்காளதேச அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-27 05:24 GMT

Image Courtesy: @ICC / @BCBtigers

டல்லாஸ்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணி நிர்வாகங்களும் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் சிறப்பாக தயாராகும் பொருட்டு 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து இந்த தொடரின் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

முதல் நாளான இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் நேபாளம் - கனடா, ஓமன் - பப்புவா நியூ கினியா, நமீபியா - உகாண்டா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தை ஜூன் 1ம் தேதி வங்காளதேசத்திற்கு எதிராக ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை வங்காளதேச அணி வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்