ஆசிய விளையாட்டு போட்டி: காயம் காரணமாக ஷிவம் மாவி விலகல்...!

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-09-17 03:05 GMT

Image Courtesy : @BCCI twitter

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடருக்கு பிசிசிஐ இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மேலும் இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் சமயத்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய ஆண்கள் அணியே சீனாவுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரரான ஷிவம் மாவி காயம் காரணமாக விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரம்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப்.

மாற்று வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்.



Tags:    

மேலும் செய்திகள்