ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : இந்தியா-பாகிஸ்தான் செப்டம்பர் 2 ஆம் தேதி மோதல்

இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெறும்.

Update: 2023-07-19 14:20 GMT

Image Courtesy : AFP 

லாகூர்,

ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையில் இந்தியா கலந்து கொள்ளாது என்றதால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

போட்டி அட்டவணையில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் முல்தானில் ஆகஸ்ட் 30 -ம் தேதி மோதுகிறது .

இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெறும்.

இந்தியா - நேபாளம் மோதும் லீக் ஆட்டம் லீக் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெறும்.

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி இலங்கையின் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 4 போட்டிகளும் , இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெற உள்ளன.ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்