ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு..!
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது
பல்லகெலே,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது
இந்த தொடரில் கிரிக்கெட்ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டி நடக்கும் மைதானம் அமைந்துள்ள இலங்கையின் பல்லகெலே பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.