ஆஷஸ் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
லண்டன்,
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
இங்கிலாந்து அணியில் கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்கும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலந்துக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும் இடம் பிடித்துள்ளனர்.