நாய் கடித்ததில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம்
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனை நாய் கடித்துள்ளது. காயத்தால் அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் தற்போது, ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, எனினும் தொடர்ந்து அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.