இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும்... - வங்காளதேச கேப்டன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் படுதோல்வி அடைந்தது.

Update: 2024-09-22 10:23 GMT

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முடிவடைந்தது. கடந்த 19-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வங்காளதேசம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறுகையில், "இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் மக்மூத், தஸ்கின் அகமது மற்றும் ராணா ஆகியோர் மிகச்சிறப்பாக பந்து வீசினர். இருந்தாலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி விட்டனர். இந்த போட்டியில் உண்மையிலேயே எங்களது அணியின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அனைவருமே சிறப்பாக பந்துவீசி இருந்தனர். குறிப்பாக புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

கடந்த இரண்டு தொடர்களாகவே எங்களது அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்து வருகிறது. நான் ஒரு பேட்ஸ்மேனாக என்னால் முடிந்த வரை அனைத்து பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்து விளையாடி வருகிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் அரைசதம் கடந்ததில் மகிழ்ச்சி. எவ்வளவு தூரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் பேட்டிங் செய்ய நினைத்தேன். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இந்த போட்டியில் கிடைத்த அனுபவம் மூலம் நாங்கள் நிச்சயம் மிக சிறப்பாக மீண்டும் வருவோம். பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ள வேளையில் நிச்சயம் இனிவரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்