வார்னர் ஓய்வுக்கு பின் இவரை தொடக்க வீரர் வரிசைக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 3-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

Update: 2023-12-30 21:45 GMT

Image Courtesy: AFP

சிட்னி,

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து வார்னர் இடத்தில் ஆடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், வார்னர் ஓய்வுக்கு பிறகு கேமரூன் கிரீனை தொடக்க வீரர் வரிசைக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, வார்னர் ஒன்றும் தேர்வாளர் கிடையாது. முன்பு அவர் தொடக்க வரிசைக்கு மேட் ரென்ஷாவின் பெயரை கூறியது இன்னும் நினைவிருக்கிறது. எங்களை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் பரிசீலிப்போம்.

தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த 6 பேட்ஸ்மேன்கள் என்ற விவாதத்தில் கேமரூன் கிரீனும் இருக்கிறார். எனவே அவரை தொடக்க வீரர் வரிசைக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். மார்கஸ் ஹாரிஸ், மேட் ரென்ஷா, கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரும் வாய்ப்பில் உள்ளனர். இதில் யாருக்கு இடம் என்பது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அறிவிக்கும் போது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்