ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் 2-வது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Update: 2023-08-24 09:58 GMT

image courtesy; twitter/@ICC

ஹம்பன்தோடா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதுகிறது. இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களுடன் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமாறு;-

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹாக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், ஷாஹிதுல்லா கமால்

பாகிஸ்தான் : பக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

Tags:    

மேலும் செய்திகள்