2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் சேர்ப்பு..!
2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
லண்டன்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றி பெற்றுள்ளது.
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்து, பேஸ்பால், சாப்ட்பால், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க 2 நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிபிடத்தக்கது.