பெண்கள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு; மிதாலி ராஜ் முன்னிலை!

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் இரண்டாம் இடம் பிடித்தார்.

Update: 2022-02-15 11:43 GMT
துபாய்,

பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அதன்படி வெளியாகியுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து  அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அவர் 744 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும்,  ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி 749 புள்ளிகளுடன்  முதலிடத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 4 இடங்கள் பின் தங்கி உள்ளார். 

அதைபோல, ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜூலன் கோஸ்வாமி 4வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் முதலிடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் எல்லைஸ் பெர்ரி முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 4வது இடத்திலும், ஜூலன் கோஸ்வாமி ஒரு இடம் பின் தள்ளப்பட்டு 11வது இடத்திலும் உள்ளனர்.

டி20 தரவரிசையில், இந்திய வீராங்கனை ஷெபாலி வர்மா 2 இடங்கள் பின் தங்கி 3ம் இடம் பிடித்தார். ஸ்மிரிதி மந்தனா 4வது இடத்தில் நீடிக்கிறார்.

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில்இந்தியாவின்  தீப்தி சர்மா 4வது இடத்தில் உள்ளார். மேலும், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3வது இடம்பிடித்தார்.

மேலும் செய்திகள்