ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: மெல்போர்னில் 80,000 ரசிகர்களுக்கு அனுமதி!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் 80,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-10-24 06:55 GMT
கோப்பு படம்
மெல்போர்ன்,

இங்கிலாந்து அணியானது இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் போட்டியானது இரு நாட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதுவும் ஆஷஸ் தொடர் என்றாலே அது கூடுதல் கவனம் பெறும். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும்  போட்டி கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறுவதால் இதனை "பாக்ஸிங் டே" என்றும் அழைப்பார்கள்.

இந்த போட்டிய காண மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் திரள்வார்கள். எனவே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைவதற்காக மைதானத்தில் 80,000 ரசிகர்கள் அணுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக பல நகரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் தொற்று ஓரளவு குறைந்ததால், அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. மெல்போர்ன் நகரில் கொரோனா கட்டுப்பாடானது  9 மாதங்களுக்கு நீடித்த நிலையில், அங்கு கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்