‘ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க நியூசிலாந்து வீரர்களுக்கு அனுமதி’ கிரிக்கெட் வாரியம் தகவல்
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு செப்டம்பர் 26-ந் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளில் நியூசிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் நீஷம் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), லோக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மிட்செல் மெக்லெனஹான், டிரென்ட் பவுல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கேன் வில்லியம்சன் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகிய 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் அளித்த பதிலில், ‘ஐ.பி.எல். போட்டியை பொறுத்தமட்டில் அதில் சம்பந்தப்பட்ட எங்கள் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கும். அந்த போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போட்டி தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வீரர்களுக்கு வழங்குவோம்’ என்று தெரிவித்தார்.