தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட்: எம்.ஐ. கேப்டவுன் அணியின் பயிற்சியாளராக சைமன் கேடிச் நியமனம்

எம்.ஐ. கேப்டவுன் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-09-15 22:06 GMT

மும்பை,

தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதலாவது எஸ்.ஏ. 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய நிறுவனங்களே சொந்தமாக்கியுள்ளன. இதில் எம்.ஐ. கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சை நிர்வகிக்கும் ரிலையன்ஸ் வாங்கியுள்ளது.

இந்த நிலையில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும், பேட்டிங் பயிற்சியாளராக ஹசிம் அம்லாவும் (தென்ஆப்பிரிக்கா), அணியின் பொதுமேலாளராக ராபின் பீட்டர்சனும் (தென்ஆப்பிரிக்கா), பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பாமென்டும் (நியூசிலாந்து) நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே ஒட்டுமொத்த அணிகளின் உயர்செயல்பாட்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மும்பை இந்தியன்சுக்கு பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் பெயர் அடிபடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்