திதியும்.. நைவேத்திய வழிபாடும்..
சிலர் தங்களின் பிறந்த தேதியை வைத்து பிறந்த நாள் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் நட்சத்திரத்தின் படி பிறந்தநாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் வழிபாடும் நடத்துவார்கள். அதேபோல் நாம் பிறந்த திதியிலும் அம்பாளை வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.
எந்த திதியில் பிறந்தோமோ அன்றைய தினம், அந்த திதிக்குரிய நைவேத்தியத்தை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெற முடியும் என்கிறார்கள். சரி.. எந்த திதியில் பிறந்தவர்கள், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
பிரதமை திதி - நெய் படைத்து வழிபடுங்கள்
துவிதியை திதி - சர்க்கரை படைத்து வழிபடலாம்
திருதியை திதி - பால் படைத்து வழிபடவேண்டும்
சதுர்த்தி திதி - ஏதாவது ஒரு இனிப்பு செய்து வைத்து வழிபடலாம்
பஞ்சமி திதி - வாழைப்பழம் வைத்து வழிபடுங்கள்
சஷ்டி திதி - தேன் படைத்து வழிபட வேண்டும்
சப்தமி திதி - வெல்லம் படைத்து வழிபடலாம்
அஷ்டமி திதி - தேங்காய் நைவேத்தியம் செய்ய வேண்டும்
நவமி திதி - நெல் பொரி படைக்க வேண்டும்
தசமி திதி - கருப்பு எள் படைத்து வணங்க வேண்டும்
ஏகாதசி திதி - தயிர் நைவேத்தியமாக வைக்க வேண்டும்
துவாதசி திதி - அவல் படைத்து வழிபடலாம்
திரயோதசி திதி - கொண்டைக்கடலை வைத்து வணங்க வேண்டும்
சதுர்த்தசி திதி - சத்து மாவு படைத்து வணங்கலாம்
பவுர்ணமி மற்றும் அமாவாசை - பாயசம் படைத்து வழிபட வேண்டும்
ஒவ்வொருவரும் பிறந்த திதியில் அந்தந்த நைவேத்தியங்களை அம்பாளுக்கு படைத்து வணங்குவதுபோல, ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் அந்தந்த நைவேத்தியங்களை தானமாக வழங்கினாலும் உரிய பலன் கிடைக்கும்.