திருச்சானூர் தெப்போற்சவம் தொடங்கியது... பத்மசரோவர் திருக்குளத்தில் கண்கொள்ளா காட்சி

விழாவின் முதல் நாளில் ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2024-06-18 09:15 GMT

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. 21-ம் தேதி வரை 5 நாட்கள் உற்சவம் நடைபெற உள்ளது.

தெப்போற்சவத்தை முன்னிட்டு பத்மசரோவர் திருக்குளம் மற்றும் திருக்குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபம் முழுவதும் மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தினுள் தெப்பம் அழகாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழாவின் முதல் நாளான நேற்று ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டு தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.

இரண்டாம் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கடைசி மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-ம் தேதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். வருடாந்திர தெப்ப உற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்